Asianet News TamilAsianet News Tamil

மகளிர் ஆசிய கோப்பை: தீப்தி ஷர்மா, ஜெமிமா அரைசதம்.. அமீரகத்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 178  ரன்களை குவித்து, 179 ரன்கள் என்ற கடின இலக்கை அமீரக மகளிர் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

india set tough target to uae in womens asia cup match
Author
First Published Oct 4, 2022, 2:56 PM IST

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், இன்று ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது. சில்ஹெட்டில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய மகளிர் அணி:

சபினேனி மேகனா, ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), ரிச்சா கோஷ்(விக்கெ கீப்பர்), கிரன் நவ்கிரே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தயாளன் ஹேமலதா, பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு மாற்று வீரர்..! இவர்களில் மூவரில் யார்..?

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ரிச்சா கோஷ்  ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனை மேகனா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹேமலதா 2 ரன்களுக்கு அவுட்டானார்.

3ம் வரிசையில் இறங்கிய தீப்தி ஷர்மா அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாததுலாம் இந்தியாவுக்கு பெரிய பிரச்னையே இல்ல..! கெத்தான காரணம் கூறும் வாரிசு வீரர்

ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜெமிமா 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று சிறப்பாக முடித்து கொடுத்தார். 20 ஓவரில் 178 ரன்களை குவித்த இந்திய மகளிர் அணி, 179 ரன்கள் என்ற கடின இலக்கை ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios