பணத்தை வைத்து உலக கிரிக்கெட்டை இந்தியா ஆள்கிறது... வயிற்றெரிச்சலில் பிதற்றும் பாக். பிரதமர் இம்ரான்கான்.!
பணம் கிரிக்கெட்டை ஆள்வதால், உலக கிரிக்கெட்டை இந்தியா ஆள்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் இந்திய கிரிக்கெட்டை மையப்படுத்தி பேசியிருக்கிறார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டியில், “உலக கிரிக்கெட்டின் நிதியாதாரம் இந்தியாவின் பிடியில் உள்ளது. எனவேதான் உலகக் கிரிக்கெட்டை அவர்கள் ஆட்டிப்படைக்கிறார்கள். பணம்தான் உலக கிரிக்கெட்டை ஆண்டுகொண்டிருக்கிறது.
பணத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆள்கிறது. அதனால் உலக கிரிக்கெட்டையும் இந்தியா ஆள்கிறது. விஷயம் அவ்வளவுதான். பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து, இங்கிலாந்து கையாள்வதுபோல செய்வது போல் இந்தியாவைச் செய்ய இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு துணிச்சல் இருக்குமா? நிச்சயம் இருக்காது. காரணம் பணம். இந்தியா நிறைய பணம் சம்பாதித்து ஐ.சி.சி.க்கு கொடுக்கிறது. இங்கிலாந்து தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுடன் ஆடுவதன் மூலம் எங்களுக்கு சாதகம் செய்துவிடும் நினைப்பில்தான் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இதற்கு ஒரு காரணம் பணம்தான். இங்கிலாந்து தொடரை ரத்து செய்வதன் பின்னணியிலும் பணம்தான். அதனால்தான் இங்கிலாந்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டுஇட்டது என்று கூறுகிறேன்” என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.