India vs Sri Lanka: மழை வர வாய்ப்பு உண்டு: இந்தியா – இலங்கை இறுதிப் போட்டியில் ரிசர்வ் டேக்கு மாற்றப்படுமா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்க இருக்கிறது.

India and Sri Lanka Asia Cup final to be moved to reserve day? rsk

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடக்கும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் காயம் காரணமாக இடம் பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியிலிருந்து அக்‌ஷர் படேல் விலகல்!

இதே போன்று இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனாவும் காயம் காரணமாக இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. மேலும், தீக்‌ஷனாவிற்குப் பதிலாக துஷான் ஹேமந்தா இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பிற்பகல் தொடங்கும் போட்டியில் மாலையில் மழை வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு 53 சதவிகித மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 4 மணி முதல் 6 மணி வரையில் 89 சதவிகித மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Asia Cup Final: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!

இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டு ரிசர்வ் டேக்கு மாற்றி வைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்தது. இன்றைய போட்டியின் மூலமாக ரோகித் சர்மா தனது 250 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார். அதோடு, 450ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.

Asia Cup 2023 Final: ஆசிய கோப்பை டிராபியை கையில் ஏந்தப் போகும் அந்த கேப்டன் யார்? டீம் எது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios