India vs Netherlands Warm Up Match: திருவனந்தபுரத்தில் மழை: இந்தியா – நெதர்லாந்து போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு!
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 9ஆவது வார்ம் அப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 2 வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய வார்ம் அப் போட்டியானது இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 7ஆவது வார்ம் அப் போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று கவுகாத்தி மைதானத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 8ஆவது வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கவுகாத்தி மைதானத்தில் 8ஆவது வார்ம் அப் போட்டியும், திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 9ஆவது வார்ம் அப் போட்டியும், ஹைதராபாத் மைதானத்தில் 10ஆவது வார்ம் அப் போட்டியும் நடத்தப்படுகிறது. ஏற்கனவே திருவனந்தபுரத்தில் மழை பெய்து வரும் நிலையில் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், மழையின் காரணமாக டக் ஒர்த் லீவிஸ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அப்படியிருக்கும் போது இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டால் போட்டியின் நடுவில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது வார்ம் அப் போட்டியானது டாஸ் போடப்பட்ட நிலையில், மழையால் ரத்து செய்யப்பட்டது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2ஆவது வார்ம் அப் போட்டியானது டாஸ் போடப்படாமலே ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து இடையிலான 5ஆவது வார்ம் அப் போட்டியில் மழையால் முடிவு எட்டப்படவில்லை.