Asianet News TamilAsianet News Tamil

INDA vs NZA: பவுலிங்கில் அசத்திய ஷர்துல் தாகூர்.. ருதுராஜ், பட்டிதார் சிறப்பான பேட்டிங்! இந்தியா ஏ அபார வெற்றி

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

india a beat new zealand a by 7 wickets in first unofficial odi
Author
First Published Sep 22, 2022, 5:21 PM IST

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா ஏ அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் சென்னையில் நடந்துவருகிறது. 

இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டர்ங்க.. பாண்டியா அந்தளவுக்குலாம் ஒர்த் இல்ல..! முன்னாள் வீரர் அதிரடி

இந்தியா ஏ அணி:

பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, ரஜாத் பட்டிதார், ஷபாஸ் அகமது, ரிஷி தவான், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், குல்தீப் சென்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து ஏ அணியில் பின்வரிசையில் ஆடிய ரிப்பான் மட்டும் அரைசதம் அடித்தார். அவர் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோ வால்கர் 36 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 40.2 ஓவரில் வெறும் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்தியா ஏ அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், குல்தீப் சென் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க - இந்திய அணி இவரை ஏன் டீம்ல வச்சுருக்காங்கனே தெரியல - மேத்யூ ஹைடன்

இதையடுத்து 168 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்தியா ஏ அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 41 ரன்கள் அடித்தார். ராகுல் திரிபாதி 31 ரன்கள் அடித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 31 ரன்களும்,  ரஜாத் பட்டிதார் 45 ரன்களும் அடித்து 32வது ஓவரிலேயே இலக்கை எட்டினர்.

7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ஏ அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலைவகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios