10:12 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live Score12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா சாதனை!!

12 ஆண்டுகளுக்கு பின்னர் சாதித்த இந்தியா. சாம்பியன் டிராபி கோப்பையை வென்றது. இன்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Score
New Zealand-251/7
Overs-50

INDIA-254/6
Overs-49

10:09 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreInd vs NZ Match - இந்தியா வெற்றிக் கொண்டாட்டம்!!

Scroll to load tweet…
09:58 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live Scoreகர்நாடகா மருமகளான யார் இந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்?

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை திருமணம் செய்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார் தெரியுமா ? இதோ முழு விவரம் !

09:57 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreChampions Trophy 2025 : சாம்பியனாக மகுடம் சூடிய டீம் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்ல் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 

மேலும் படிக்க: 

09:02 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreChampions Trophy 2025 Final : 4ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா – ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்!

IND vs NZ, Shreyas Iyer : இந்தியா 4ஆவது விக்கெட்டாக ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழந்துள்ளது. அவர், 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது வரையில் இந்தியா 38.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

08:36 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ, Ravindra Jadeja : ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு?

IND vs NZ Champions Trophy 2025 Final : ஒருநாள் போட்டியிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகி வருகிறது. நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்கு பிறகு ரவீந்திர ஜடேஜாவை விராட் கோலி கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலமாக அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

#RavindraJadejaRetirement #ICCChampionsTrophy2025 

08:20 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live Score3 ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா - ரோகித் சர்மா அவுட்!

IND vs NZ Final : இந்தியா தனது 3ஆவது விக்கெட்டை இழந்துள்ளது. பொறுப்புடன் விளையாடி வந்த ரோகித் சர்மா அவசரப்பட்டு இறங்கி அடிக்க முயற்சி ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

07:56 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreVirat Kohli Out : விராட் கோலி அவுட் – 2ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா!

IND vs NZ Final : இந்தியா தனது 2ஆவது விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை இழந்துள்ளது. பிரேஸ்வெல் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 1 ரன்னுக்கு நடையை கட்டினார். தற்போது வரையில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

07:54 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live Scoreமுதல் விக்கெட்டை இழந்த இந்தியா – சுப்மன் கில் 31 ரன்னுக்கு அவுட்!

நியூசிலாந்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 251 ரன்களை சேஸ் செய்து இந்திய அணியில் சுப்மன் கில் 31 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். சான்ட்னர் ஓவரில் பிலிப்ஸ் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

07:21 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ Final : ரோகித் சர்மா அரைசதம் – இந்தியா 11 ஓவர்களில் 65 ரன்கள்

India vs New Zealand Final : இந்தியா 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் விளையாடி வருகின்றனர். இதில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 58ஆவது அரைசதம் அடித்துள்ளார். அவர் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்துள்ளார்.

06:50 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ Final : இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா: 252 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா?

IND vs NZ Final : துபாய் மைதானத்தில் 251 ரன்களை கடின இலக்காக கொண்டு இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். 3 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

06:09 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ Final : நியூசிலாந்து 50 ஓவர்களில் 251 ரன்கள் குவிப்பு!

Champions Trophy 2025 Final : பிரேஸ்வெலின் அபார அரைசதத்தால் நியூசிலாந்து 251 ரன்களை எட்டியது. இந்தியாவிற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்தது. மைக்கேல் பிரேஸ்வெல் நிதானமாக விளையாடி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிக ரன்கள் கொடுத்த வேகப்பந்து வீச்சாளர்: 

முகமது ஷமி 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 74 ரன்கள் கொடுத்தார். இந்தப் போட்டியில் Most Expensive Player ஆக ஷமி திகழ்கிறார்.

ஹர்திக் பாண்டியா 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.

சிறப்பாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர்கள்:

  • குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் 2 விக்கெட் – 40 ரன்கள்
  • வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்கள் 2 விக்கெட் – 45 ரன்கள்
  • ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் 1 விக்கெட் – 30 ரன்கள்
  • அக்சர் படேல் 8 ஓவர்கள் 29 ரன்கள் – விக்கெட் எடுக்கவில்லை.

251 ரன்களை இந்திய அணி சேஸ் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். குரூப் சுற்று போட்டியில் நியூலாந்திற்கு எதிராக இந்தியா 249 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய நியூ., 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

05:56 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ Final : 7ஆவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து!

கேப்டன் மிட்செல் சான்ட்னர் 8 ரன்கள் எடுத்து அன் அவுட்டானார். நியூசி 49 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது.

05:41 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreChampions Trophy 2025 Final : 6ஆவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து – டேரில் மிட்செல் 63 ரன்னுக்கு அவுட்!

IND vs NZ Final : நிதானமாக விளையாடி வந்த டேரில் மிட்செல் கடைசியில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். அவர் 63 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி ஓவரில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 46 ஓவர்களில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.

05:35 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ Final : நியூசிலாந்து 45 ஓவர்களில் 201 ரன்கள் – கடைசி 5 ஓவர்

நியூசிலாந்து 45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது. கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தால் இந்திய அணிக்கு 250 ரன்களை சேஸ் செய்வது சற்று கடினமானதாக இருக்கும்.

05:27 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ Final : அரைசதம் அடித்த டேரில் மிட்செல்!

Champions Trophy 2025 Final : நிதானமாக விளையாடிய டேரில் மிட்செல் (Daryl Mitchell) அரைசதம் கடந்தார். அவர், ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சிறபபாக விளையாடி வருகிறார்.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் டேரில் மிட்செல்:

72*(47) vs இங்கிலாந்து, T20 உலகக் கோப்பை 2021 அரையிறுதி போட்டி

11(8) vs ஆஸ்திரேலியா, T20 உலகக் கோப்பை 2021 ஃபைனல்

53*(35) vs பாகிஸ்தான், T20 உலகக் கோப்பை 2022 அரையிறுதி போட்டி

134 (119) vs இந்தியா, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அரையிறுதி போட்டி

49(37) vs தென் ஆப்பிரிக்கா, சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி போட்டி

50*(91) vs இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி 2025 ஃபைனல்

05:16 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live Scoreநியூசிலாந்து தடுமாற்றம் – 250 ரன்கள் குவிக்க வாய்ப்பு!

IND vs NZ Final : நியூசிலாந்து 40 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது. இதே நிலையில் நியூசிலாந்து சென்றால் குறைந்தது 230 ரன்கள் முதல் 250 ரன்கள் வரையில் எடுக்க வாய்ப்பிருக்கிறது. இதுவே விக்கெட் விழுந்தால் 220 ரன்கள் வரையில் எடுக்கலாம்.

மேலும் படிக்க

05:05 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIndia vs New Zealand : கிளென் பிலிப்ஸ் அவுட் – 5ஆவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து!

நியூசிலாந்து 5ஆவது விக்கெட்டாக கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை இழந்துள்ளது. வருண் சக்கரவர்த்தி ஓவரில் 34 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார். நியூசிலாந்து 38 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. மைக்கேல் பிரேஸ்வெல் களமிறங்கியுள்ளார்.

04:58 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live ScoreIND vs NZ Final : கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி!

நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டு வருகிறது.

  • ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்டார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
  • வருண் சக்கரவர்த்தி ஓவரில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார்.
  • அக்‌ஷர் படேல் ஓவரில் டேரில் மிட்செல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரோகித் சர்மா தவறவிட்டார்.
  • ரவீந்திர ஜடேஜா ஓவரில் கிளென் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சுப்மன் கில் தவறவிட்டார்.

இப்படி இந்திய அணி வீரர்கள் கேட்ச் தவறவிட்டது, எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

04:47 PM (IST) Mar 09

IND vs NZ ICC champions Trophy 2025 Live Scoreநியூசிலாந்து நிதானம் ஆட்டம் – 33 ஓவர்களில் 147 ரன்கள் குவிப்பு!

IND vs NZ Final : நியூசிலாந்து 33 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கிளென் பிலிப்ஸ் (24) மற்றும் டேரில் மிட்செல் (36) நிதானமாக விளையாடி வருகின்றனர்.