ஜடேஜாவின் போராட்டத்துக்கு மத்தியில் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG 3rd Test Day 5 Live Blog: கடைசி வரை திக் திக் திக்! 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி! போராடிய ஜடேஜா! பும்ரா, சிராஜ் அசத்தல்!
IND vs ENG 3rd Test Day 5 Live Blog: கடைசி வரை திக் திக் திக்! 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி! போராடிய ஜடேஜா! பும்ரா, சிராஜ் அசத்தல்!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான லைவ் ஸ்கோர்கள் மற்றும் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
IND vs ENG 3rd Testகடைசி வரை திக் திக் திக்! 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி! போராடிய ஜடேஜா! பும்ரா, சிராஜ் அசத்தல்!
IND vs ENG 3rd Testஇந்திய அணியை மீட்ட ஜடேஜா! கைகொடுத்த பும்ரா, சிராஜ்! வெற்றி பெறுமா?
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டில் 193 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் இந்திய அணி 5ம் நாளில் தேநீர் இடைவேளை வரை 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. 112 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோல்வியின் பாதையில் இருந்த இந்திய அணியை மீட்ட ஜடேஜா அரை சதம் அடித்தார். அவருக்கு பக்க பலமாக விளங்கிய பும்ரா 54 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்பு 147/9 என தவித்த நிலையில், ஜடேஜாவுக்கு சிராஜ் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். 20 பந்துகள் ஆடியுள்ள சிராஜ் 2 ரன்னிலும், ஜடேஜா 162 பந்தில் 56 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை.
IND vs ENG 3rd Testமுடிஞ்சா என்னை அவுட்டாக்கி பாரு! மனம் தளராமல் போராடிய பும்ரா! குவியும் பாராட்டு!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சூப்பராக பேட்டிங் செய்த ஜஸ்பிரித் பும்ராவை நெட்டிசன்கள் பாராட்டினார்கள்.
IND vs ENG 3rd Testவெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து! தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டில் 193 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் இந்திய அணி 5ம் நாளில் உணவு இடைவேளை வரை 112 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோல்வியின் பாதையில் உள்ளது. ஓரளவு சிறப்பாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி (13) வோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனதும் நம்பிக்கை தகர்ந்தது. இந்தியாவுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் கையில் உள்ளன. ஜடேஜா (17) களத்தில் உள்ளார். இனி ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இந்தியா ஜெயிக்கும்.
IND vs ENG 3rd Testஇது தேவையில்லாத செயல்! சிராஜுக்கு 'குட்டு' வைத்த ஐசிசி! 15% அபராதம்! என்ன நடந்தது?
இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டுடன் மோதிய முகமது சிராஜுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
IND vs ENG 3rd Testவாஷிங்டன் சுந்தரும் காலி! இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டில் 193 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் இந்திய அணி 5ம் நாளில் 7வது விக்கெட்டையும் இழந்துள்ளது. பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 87/7 என தள்ளாடி வருகிறது. வெற்றிக்கு இன்னும் 106 ரன்கள் தேவை. ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி களத்தில் உள்ளனர்.
IND vs ENG 3rd Testகே.எல்.ராகுல் விக்கெட்டையும் இழந்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டில் 193 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் இந்திய அணி 5ம் நாளில் ரிஷப் பண்ட்டை தொடர்ந்து கே.எல்.ராகுல் விக்கெட்டையும் இழந்துள்ளது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுல் 39 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.ட.பிள்யூ ஆனார். இந்திய அணி 81/6 என தடுமாறி வருகிறது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் களத்தில் உள்ளனர்.
IND vs ENG 3rd Test5ம் நாள் தொடக்கத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி! ரிஷப் பண்ட் அவுட்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 193 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும் இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. காயத்துடன் தடுமாறி பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 9 ரன்னில் ஆர்ச்சர் பந்தில் போல்டானார். இந்திய அணி 81/5 என்ற நிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் (39), ஜடேஜா (6) களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றிக்கு 112 ரன்கள் தேவைப்படுகிறது.
IND vs ENG 3rd Test3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா?
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணி 58/4 என்ற நிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியா வெற்றிக்கு 135 ரன்கள் மட்டுமே தேவை. 6 விக்கெட்டுகள் கையில் உள்ளன. கடைசி நாள் ஆட்டம் தொடங்கும் நிலையில் இந்தியா வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.