Asianet News TamilAsianet News Tamil

கோமாளினு திட்டு வாங்கியும் அடங்காத இம்ரான் தாஹிர்.. மறுபடியும் வேண்டுமென்றே கடுப்பேற்றிய வீடியோ

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காலின் முன்ரோவுக்கும் இம்ரான் தாஹிருக்கும் இடையே தாஹிரின் விக்கெட் கொண்டாட்டம் தொடர்பாக மோதல் வெடித்த நிலையில், அதற்கு பின்னரும் ஷதாப் கானின் விக்கெட்டை படுமோசமான முறையில் இம்ரான் தாஹிர் கொண்டாடினார். 
 

imran tahir animated celebration after shadab khan wicket video
Author
Pakistan, First Published Mar 10, 2020, 10:56 AM IST

பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி மழை காரணமாக 9 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட து. இந்த போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இம்ரான் தாஹிரின் ஒரே மாதிரியான, உச்சபட்ச கொண்டாட்டத்தால் கடுப்பான முன்ரோவுக்கும் தாஹிருக்கும் இடையே மோதல் வெடித்தது. இம்ரான் தாஹிர் பொதுவாக விக்கெட் வீழ்த்திவிட்டால், இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு ஓட்டமாக ஓடி, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடுவார். தாஹிரின் கொண்டாட்டம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், அதை பார்த்து பார்த்து சளித்துப்போன வீரர்களால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. 

imran tahir animated celebration after shadab khan wicket video

அதன் வெளிப்பாடாகத்தான் இந்த சண்டை நடந்தது. இஸ்லாமாபாத் அணி வீரரான காலின் முன்ரோவின் விக்கெட்டை 5வது ஓவரில் வீழ்த்திய இம்ரான் தாஹிர் வழக்கம்போல கையை விரித்துக்கொண்டு ஓடினார். அதைக்கண்டு கடுப்பான முன்ரோ, கோமாளி என அவரை விமர்சித்துள்ளார். ஆனால் முன்ரோ ஏதோ சொன்னதை உணர்ந்த தாஹிர், என்ன சொன்னார் என்று தெரியாமல், தன்னை ஏதோ தகாத வார்த்தையில் திட்டியதாக நினைத்து அவரும் பதிலுக்கு முன்ரோவை திட்ட, மோதலானது. 

இந்த சண்டை நடந்த முடிந்துவிட்ட போதிலும், அதே கடுப்பில் இருந்திருப்பார் போல இம்ரான் தாஹிர்.. அதனால் ஷதாப் கானை அவுட்டாக்கியதும், படுமோசமாக அதை கொண்டாடினார். ரொம்ப ஆக்ரோஷமாக அத்துமீறிய கொண்டாட்டமாக அது அமைந்தது.அந்த கொண்டாட்டம் ரசிக்கும்படியானதாக இல்லை. அந்த வீடியோ இதோ.. 

Follow Us:
Download App:
  • android
  • ios