ஐபிஎல் 15வது சீசனில் அறிமுகமாகும் 2 புதிய அணிகள் எந்த நகரங்களை சேர்ந்தவை என்று வெளியாகியுள்ள தகவலை பார்ப்போம். 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. இதுவரை 8 அணிகள் ஐபிஎல்லில் ஆடிவரும் நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

அடுத்த சீசனில் 2 புதிய அணிகளை சேர்ப்பது ஏற்கனவே உறுதியாகியிருந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. அதன்படி, புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

2 கூடுதல் அணிகள் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியம் இருப்பதால் அகமதாபாத் ஒரு நகரம் உறுதி. 2வது நகரம் பெரும்பாலும் லக்னோவாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதற்கான போட்டியில் நாக்பூர், ராய்ப்பூர், புனே, விசாகப்பட்டினம் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களும் இருக்கின்றன. ஆனால் அவைகளுக்கெல்லாம் வாய்ப்பு மிக மிகக்குறைவு.