TNPL 2025 CSG vs IDTT Qualifier 1 : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது.
TNPL 2025 CSG vs IDTT Qualifier 1 : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 8 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் இப்போது 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் முதல் தகுதிச் சுற்றில் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டி தற்போது திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இதில், அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இதில், ரஹேஜா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அமித் சாத்விக் 57 ரன்கள் எடுத்து ஆட்டைழந்தார். இதில், 6 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும். அதன் பிறகு வந்த கேப்டன் சாய் கிஷோர் தன் பங்கிற்கு 33 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கடைசியில் வந்த உத்திரசாமி சசிதேவ் 26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 57 ரன்கள் எடுத்துக் கொடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் பிரதோஷ் பால் 16 ரன்கள் எடுக்கவே திருப்பூர் தமிழன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியில் லோகேஷ் கனகராஜ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். விஜய் சங்கர் ஒரு விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது 203 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்து வருகிறது.
