IDream Tiruppur Tamizhans Entered Into TNPL 2025 Final in Tamil டிஎன்பிஎல் 2025 தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டியில் ஐடீரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் 2025 தொடரின் முதல் தகுதிச் சுற்று போட்டி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பவுலிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டின் செய்த திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. இதில் அமித் சாத்விக் 57 ரன்களும், உதிரசாமி சசிதேவ் 57 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் 203 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் ஆதிக் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர் எஸ் மோகித் ஹரிஹரன் 25 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் பாபா அபரஜித் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் உள்பட பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.இறுதியாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 16.1 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகலையும் இழந்து 123 ரன்கள் எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக திருப்பூர் தமிழன்ஸ் அணியானது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நாளை 2ஆம் தேதி நடைபெறும் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 20ஆம் தேதி நடைபெறுகிறது.