Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: ஐசிசி வெளியிட்ட விதிமுறைகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐசிசி.
 

icc releases rules for world test championship final
Author
Chennai, First Published May 28, 2021, 4:33 PM IST

முதல் முறையாக நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வரும் ஜூன் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. 

ஐசிசி வெளியிட்டுள்ள விதிமுறைகள்:

* டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி டிராவிலோ அல்லது டையிலோ முடிந்தால், இரு அணிகளுமே இணை வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.

* 5 நாள் ஆட்டமும்முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்ய ரிசர்வ் நாள் கொண்டுவரப்படுகிறது. 5 நாள் ஆட்டமும் முழுமையாக நடைபெறாமல் வானிலை காரணமாக ஆட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருந்தால், 5 நாள் ஆட்டம் முடிந்த பின்,  ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்ட 6வது நாள் போட்டி ஆடப்படும். ஆனால், 5 நாட்களில் போட்டியில் முடிவு கிடைக்கவில்லை என்பதற்காக ரிசர்வ் நாள் ஆட்டம் ஆடப்படமாட்டாது.

* கிரேட் 1 டியூக் பந்துகள் பயன்படுத்தப்படும்.

* ஷார்ட் ரன்கள் - வீரர்கள் ரன் ஓடும்போது க்ரீஸை முறையாக தொடவில்லை(ஷார்ட் ரன்) என்றால், அதை தேர்டு அம்பயர் நேரடியாக ஆய்வு செய்து கள நடுவருக்கு தெரியப்படுத்துவார். அடுத்த பந்து வீசுவதற்கு முன்பாக தேர்டு அம்பயர் தெரியப்படுத்துவார்.

* பிளேயர் ரிவியூ - எல்பிடபிள்யூ விவகாரத்தில், ரிவியூ எடுப்பதற்கு முன்பாக, பந்து கால்காப்பில் பட்டதா என்பதை ஃபீல்டிங் அணி கேப்டனோ அல்லது பேட்ஸ்மேனோ களநடுவரிடம் உறுதி செய்துகொள்ளலாம். பின்னர் ரிவியூ எடுக்கலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios