டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 18ல் இந்தியாவில் தொடங்குவதாக இருந்தது. அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் இந்தியாவில் நடக்கவிருந்த டி20 உலக கோப்பையை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ பரிந்துரைத்திருப்பதாக நேற்றுதான் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பையை நடத்துவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரையிலான காலக்கட்டத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பை நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை அமீரகம், ஓமனில் நடத்தப்பட்டாலும், இந்த தொடர் இந்தியா சார்பிலேயே அங்கு நடத்தப்படுகிறது.