2024 முதல் 2031ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்படும் ஐசிசி தொடர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) போர்டு மீட்டிங் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில், ஒருநாள் உலக கோப்பையில் 14 அணிகளை ஆடவைப்பது, சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் நடத்துவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்துவது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை ஐசிசி எடுத்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் 2024 முதல் 2031ம் ஆண்டு வரை நடக்கவுள்ள ஐசிசி தொடர்கள் வெளியிடப்பட்டன.

2024-2031 காலக்கட்டத்தில் நடைபெறவுள்ள ஐசிசி தொடர்கள்:

2024 - ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2025 - ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், மகளிர் ஒருநாள் உலக கோப்பை

2026 - ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2027 - ஆடவர் ஒருநாள் உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஃபைனல், மகளிர் டி20 சாம்பியன்ஸ் டிராபி

2028 - ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2029 - ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், மகளிர் ஒருநாள் உலக கோப்பை

2030 - ஆடவர், மகளிர் டி20 உலக கோப்பை

2031 - ஆடவர் ஒருநாள் உலக கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், மகளிர் டி20 சாம்பியன்ஸ் டிராபி.