Asianet News TamilAsianet News Tamil

எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சுதான் நடந்துச்சு.. உங்க வேலைய பாருங்க.. பாகிஸ்தானின் வாயை அடைத்த ஐசிசி

ராஞ்சி போட்டியில் ராணுவ தொப்பியை அணிந்துதான் இந்திய வீரர்கள் ஆடினர். இந்திய அணி அந்த தொப்பியை அணிந்து ஆடியதால் அதை உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். இதைக்கண்டு பாகிஸ்தான் கொதிப்படைந்தது.
 

icc clarified that bcci got early permission to wear army cap
Author
India, First Published Mar 10, 2019, 12:54 PM IST

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களை ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கௌரவப்படுத்தியது. 

கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் புல்வாமா பகுதியில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாமை ஒட்டுமொத்தமாக அழித்தது. 

icc clarified that bcci got early permission to wear army cap

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் ராணுவ உடையின் டிசைனில் வடிவமைக்கப்பட்ட தொப்பியை அணிந்து ஆடினர். இந்த தொப்பியை அனைத்து வீரர்களுக்கும் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி வழங்கினார். அதுமட்டுமல்லாமல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக நேற்றைய போட்டிக்கான ஊதியத்தை வழங்கினார்கள்.

icc clarified that bcci got early permission to wear army cap

ராஞ்சி போட்டியில் ராணுவ தொப்பியை அணிந்துதான் இந்திய வீரர்கள் ஆடினர். இந்திய அணி அந்த தொப்பியை அணிந்து ஆடியதால் அதை உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். இதைக்கண்டு பாகிஸ்தான் கொதிப்படைந்தது.

இந்திய அணி ராணுவ தொப்பியை அணிந்து ஆடியதற்காக இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி வலியுறுத்தினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குரேஷி, இந்திய அணி ராணுவ தொப்பியை அணிந்து ஆடியதை உலகமே பார்த்திருக்கும். ஐசிசி பார்க்கவில்லையா..? இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

பாகிஸ்தானின் மற்றொரு அமைச்சரான சௌத்ரி, இந்திய அணி இதுபோன்ற சம்பவங்களை நிறுத்தவில்லை, காஷ்மீரில் இந்தியாவின் அத்துமீறல்களை பறைசாற்றும் விதமாக பாகிஸ்தான் அணியும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடும் என எச்சரித்தார். 

icc clarified that bcci got early permission to wear army cap

இந்நிலையில், ராணுவ தொப்பியை அணிந்து ஆடுவதற்கு ஐசிசி-யிடம் பிசிசிஐ முன்கூட்டியே அனுமதி பெற்றதாக ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ராஞ்சியில் மூன்றாவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை நடந்த நிலையில், வியாழக்கிழமையே ஐசிசி சி.இ.ஓ தேவ் ரிச்சர்ட்ஸனிடம் பிசிசிஐ அனுமதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது தெரியாமல் பாகிஸ்தான் அமைச்சர்கள் பிதற்றியுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios