இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசாத்தில் அபார வெற்றி பெற்றது. 

பர்மிங்காமில் நடந்த அந்த போட்டியில், இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக இருந்தது ஸ்டீவ் ஸ்மித் தான். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து இங்கிலாந்தை தெறிக்கவிட்டார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஸ்மித் மட்டுமே 286 ரன்களை குவித்துவிட்டார். எனவே ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமெனில், இங்கிலாந்து அணி ஸ்மித்தை வீழ்த்த வேண்டியது அவசியம். 

ஸ்மித்தை வீழ்த்துவதற்கு ஜோஃப்ரா ஆர்ச்சரை ஆயுதமாக பயன்படுத்துவதுதான் இங்கிலாந்தின் திட்டமாக இருக்கும். முதல் போட்டியில் சேர்க்கப்படாத ஆர்ச்சர், இரண்டாவது டெஸ்ட்டுக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். 

முதல் போட்டியில் சரியாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சரியாக செயல்படாத மொயின் அலி, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. மொயின் அலி ஓரங்கட்டப்பட்டு லீச் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய சாம் கரனுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆஷஸ் தொடர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல், இங்கிலாந்து அணியை வறுத்தெடுத்தார். இங்கிலாந்து அணியின் பிரச்னைகளை சுட்டிக்காட்டியதோடு, ஆஸ்திரேலிய அணிதான் தொடரை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இங்கிலாந்து அணிக்கு இதெல்லாமே பிரச்னைதான்.. அவங்க ஒரு டம்மி பீஸு.. தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி தேர்வு குறித்து பேசிய இயன் சேப்பல், இரண்டாவது போட்டிக்கு சமரசத்துக்கு இடமின்றி இங்கிலாந்து அணி தேர்வு இருக்க வேண்டும். ஆஃப் ஸ்பின்னர் லீச், மொயின் அலியை விட சிறந்தவர் என்று நான் நினைக்கவில்லை. நான் இங்கிலாந்து அணி தேர்வில் இருந்தால், ஸ்பின்னரே தேவையில்லை என்று அதிரடி முடிவெடுத்து சாம் கரனையும் ஜோஃப்ரா ஆர்ச்சரையும்தான் ஆடும் லெவனில் தேர்வு செய்வேன் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.