உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணியும் சிறப்பாக ஆடிவருகிறது. 

விறுவிறுப்பாக உலக கோப்பை நடந்துவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும் உலக கோப்பை தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவருமான இயன் பிஷப், ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். 

இந்த அணியின் தொடக்க வீரர்களாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரான சச்சினுக்கு ஓபனிங் பார்ட்னராக ரோஹித்தை தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸையும் நான்காம் வரிசையில் விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார். 

டிவில்லியர்ஸை ஐந்தாம் வரிசையிலும் ஆல்ரவுண்டராக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூசனரையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ஒன் அண்ட் ஒன்லி தோனியையும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஸ்விங் மன்னன் வாசிம் அக்ரம், மெக்ராத் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோயல் கார்னர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக சாக்லைன் முஷ்டாக்கை தேர்வு செய்திருக்கிறார். 

இயன் பிஷப்பின் ஆல்டைம் சிறந்த ஒருநாள் அணி:

சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விவியன் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி, டிவில்லியர்ஸ், லான்ஸ் குளூசனர், தோனி, வாசிம் ரக்ரம், சாக்லைன் முஷ்டாக், ஜோயல் கார்னர், கிளென் மெக்ராத்.