Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ், பட்லர்..! இங்கிலாந்து தடுமாற்றம்

பென் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 
 

holder takes stokes and buttler wickets and england struggle in batting against west indies
Author
Southampton, First Published Jul 9, 2020, 7:55 PM IST

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. கொரோனா அச்சுறுத்தலால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டி நடந்துவருகிறது.

நேற்று முழுவதும் மழை பெய்ததால் பெரும்பாலான ஆட்டம் பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. நேற்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதையடுத்து ரோரி பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த அவர்கள் இருவரும் இரண்டாம்ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். 

இரண்டாவது விக்கெட்டுக்கு 48 ரன்களை இருவரும் சேர்த்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில், அதை அனுமதிக்காத கேப்ரியல், ஜோ டென்லியை அருமையான இன்ஸ்விங்கின் மூலம் கிளீன் போல்டாக்கினார். ஜோ டென்லி 18 ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து, பர்ன்ஸும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையும் கேப்ரியல் தான் வீழ்த்தினார். 

அதன்பின்னர், ஜாக் க்ராவ்லி 10 ரன்களிலும் ஓலி போப் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸும் பட்லரும் களத்தில் இருந்த நிலையில், மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. இவர்கள் இருவரும் அனுபவமான மற்றும் அணியின் நட்சத்திர வீரர்கள் என்பதால், ஜோடி சேர்ந்து பெரிய இன்னிங்ஸ் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் லன்ச் முடிந்து வந்ததுமே, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார். ஹோல்டரின் அடுத்த ஓவரில் பட்லரும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஃப்ரா ஆர்ச்சரும் டக் அவுட்டாக, 157 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. டோமினிக் பெஸ்ஸும் மார்க் உட்டும் களத்தில் உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios