Asianet News TamilAsianet News Tamil

டி20 கிரிக்கெட்டின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்..! ஹெர்ஷல் கிப்ஸ் அதிரடி

டி20 கிரிக்கெட்டில் சமகாலத்தின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹெர்ஷல் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
 

herschelle gibbs picks top 4 batsmen of t20 cricket
Author
South Africa, First Published Aug 14, 2021, 7:21 PM IST

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆல்டைம் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய வெகுசில பேட்ஸ்மேன்களில் கிப்ஸும் ஒருவர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 435 ரன்கள் என்ற இலக்கை விரட்டி தென்னாப்பிரிக்கா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றபோது, அதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கிப்ஸ். 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலேயே டி20யை போல அடித்து ஆடியவர் கிப்ஸ். பின்னர் 2007ல் டி20 கிரிக்கெட் வந்தபிறகு அதிலும் கோலோச்சினார். ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடினார். 

ஆல்டைம் பெஸ்ட் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கிப்ஸ், சமகாலத்தில் டி20 கிரிக்கெட்டின் டாப் 4 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி, பாபர் அசாம், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் என வரிசைப்படுத்தியுள்ளார் கிப்ஸ்.

herschelle gibbs picks top 4 batsmen of t20 cricket

இந்த பட்டியலில் ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் ஆகிய அதிரடி வீரர்களையே தேர்வு செய்யாத கிப்ஸ், ஸ்மித்தை தேர்வு செய்திருப்பது ஆச்சரியம் தான். ஸ்மித் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் நன்றாக ஆடுகிறார் என்றாலும், டி20 கிரிக்கெட்டில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் எடுக்குமளவிற்கான வீரரா என்பது கிப்ஸுக்குத்தான் வெளிச்சம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios