2020 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கிறது. இதற்கிடையே ஐபிஎல் அணிகள், வீரர்கள் பரிமாற்றத்தில் ஈடுபட்டன. அந்தவகையில், ஐபிஎல் அணிகள் பரிமாறிக்கொண்ட வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

பஞ்சாப் அணியில் கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திய அஷ்வினை அந்த அணி, டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு ஜெகதீஷா சுஜித்தையும் கூடுதலாக ஒன்றரை கோடியையும் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் அணி, கர்நாடக ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை பஞ்சாப் அணிக்கு கொடுத்துவிட்டு அந்த அணியிலிருந்து அங்கிட் ராஜ்பூட்டை பெற்றுள்ளது.

இதையெல்லாம் விட, அதிர்ச்சியளிக்கும் விதமாக ரஹானேவை கழட்டிவிட்டது ராஜஸ்தான். அந்த அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் ஆடிய சிறந்த பேட்ஸ்மேனான ரஹானேவை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு, ரஹானேவிற்கு பதிலாக ராகுல் டேவாட்டியா மற்றும் மயன்க் மார்கண்டே ஆகிய இரண்டு ஸ்பின்னர்களை ராஜஸ்தான் அணி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியின் இடது கை நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட்டை டெல்லி அணியிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. அதேபோல ராஜஸ்தான் அணியில் இருந்த தவால் குல்கர்னியையும் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.