ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இதற்கிடையே ஐபிஎல் அணிகள் சில வீரர்களை பரிமாற்றம் செய்துகொண்டன. வேண்டாத வீரர்களை கழட்டிவிட்டுள்ளன. அந்தவகையில், கேகேஆர் அணி நிர்வாகம் தக்கவைத்துள்ள மற்றும் கழட்டிவிட்டுள்ள வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம். 

கேகேஆர் அணி கழட்டிவிட்டுள்ள முக்கியமான வீரர் ராபின் உத்தப்பா. கடந்த 2 சீசன்களாக அந்த அணியின் துணை கேப்டனாக இருந்துவந்த ராபின் உத்தப்பாவை கேகேஆர் அணி கழட்டிவிட்டுள்ளது. ராபின் உத்தப்பா, அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவிற்கு அதிரடியாகவும் ஆடவில்லை, நன்றாகவும் ஆடவில்லை. மிகவும் மந்தமாக ஆடி பந்துக்கு சமமான ரன்னை மட்டுமே அடித்து அணிக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத இன்னிங்ஸ்களையே ஆடினார். அதனால் அவரை அதிரடியாக கழட்டிவிட்டுள்ளது கேகேஆர். 

கேகேஆர் அணி அடுத்ததாக கழட்டிவிட்டுள்ள பெரிய பெயர் கிறிஸ் லின். லின் பெரும்பாலும் காயமடைந்துவிடுகிறார் அல்லது 10ல் 2-3 இன்னிங்ஸில்தான் நன்றாக ஆடுகிறார். அதனால் அவர் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை என்பதால் அவரையும் கேகேஆர் அணி கழட்டிவிட்டுள்ளது. 

கேகேஆர் கழட்டிவிட்டுள்ள வீரர்கள்:

ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், பியூஷ் சாவ்லா, ஜோ டென்லி, காரியப்பா, பிராத்வெயிட், அன்ரிச் நோர்ட்ஜே, நிகில் நாயக், மேத்யூ கெல்லி, யார்ரா பிரித்விராஜ், ஸ்ரீகாந்த் முந்தே ஆகிய வீரர்களையும் கேகேஆர் அணி கழட்டிவிட்டுள்ளது. 

கேகேஆர்  தக்கவைத்துள்ள வீரர்கள்:

தினேஷ் கார்த்திக், ரசல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஷுப்மன் கில், லாக்கி ஃபெர்குசன், நிதிஷ் ராணா, சந்தீப் வாரியர், கர்னி, கம்லேஷ் நாகர்கோடி, ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா.

மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து சித்தேஷ் லத்தை கேகேஆர் அணி வாங்கியுள்ளது.