இந்திய அணியின் கேப்டன் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டே பல கோடிகளை குவிக்கிறார். 

இந்திய அணியின் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான கோலி, தனது கெரியரின் உச்சத்தில் இருக்கிறார். இந்திய அணியில் ஆடுவதற்காக பெறும் சம்பளம் தவிர பல்வேறு விளம்பரங்களில் நடித்து கோடிகளை குவித்துவருகிறார். 

அதுமட்டுமல்லாமல் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டால், இன்ஸ்டாக்ராம் நிறுவனம் அவருக்கு ரூ.1.35 கோடியை ஊதியமாக கொடுக்கிறது. இன்ஸ்டாக்ராம் பதிவிற்கு அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி. இந்த பட்டியலில் டாப் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர் கோலி தான். விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3.6 கோடி பேர் ஃபாலோ செய்கின்றனர்.

இந்த பட்டியலில் கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி, டேவிட் பெக்காம் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளனர். விராட் கோலி 9ம் இடத்தில் உள்ளார். ஒரு பதிவுக்கு 1.35 கோடி என்றால், கோலி இதில் மட்டும் எவ்வளவு சம்பாதிப்பார் என்று நினைத்து பாருங்கள்.