IPL 2023: அகமதாபாத்தில் கனமழை.. மும்பை - குஜராத் தகுதிப்போட்டி நடக்குமா..? ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் 16வது சீசனில் 2வது தகுதிப்போட்டி நடக்கும் அகமதாபாத்தில் கனமழை பெய்துவருவதால் ஆட்டம் தொடங்குவது தாமதமாகியுள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸும், முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28ம் தேதி நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பதாலும் நாக் அவுட் போட்டி என்பதாலும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டி. இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஆட்டம் நெருங்கிய நிலையில், 6.15 மணி முதல் கனமழை பெய்துவருகிறது. அதனால் ஆட்டம் தாமதமாகியுள்ளது.
இது நாக் அவுட் போட்டி என்பதால் இரவு 9.15 மணிக்குள்ளாக போட்டி தொடங்கினால் 20 ஓவர் போட்டியாக முழுமையாக நடத்தப்படும். அதன்பின்னரும் தாமதமானால் தான் ஓவர்கள் குறைக்கப்படும்.