Asianet News TamilAsianet News Tamil

இது அதுமாதிரி அவ்வளவு ஈசியில்ல.. நீ என்ன பண்றனு நாங்களும் பார்க்குறோம்.. ஆஷஸுக்கு முன் இங்கிலாந்து வீரரை மிரட்டும் ஆஸி., வீரர்

ராய், பட்லர், பேர்ஸ்டோ என அதிரடி மன்னர்கள் இங்கிலாந்து அணியில் உள்ள நிலையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர். பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஃபீல்டிங் அனைத்திலும் சிறந்த அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. ஆஸ்திரேலிய அணியை பற்றி சொல்லவே தேவையில்லை. எல்லா காலக்கட்டத்திலுமே அந்த அணி சிறந்தே விளங்கியுள்ளது. 
 

hazlewood waiting to watch jason roys batting in test cricket
Author
England, First Published Jul 29, 2019, 12:19 PM IST

ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமாக கருதுவது ஆஷஸ் தொடரைத்தான். கிரிக்கெட் வரலாற்றில் பழமையான ஆஷஸ் தொடர், இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர். 

உலக கோப்பையை வென்ற உற்சாகத்திலும் உத்வேகத்திலும் ஆஷஸ் தொடரை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. உலக கோப்பையில் அசத்திய ஜேசன் ராய், அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய நிலையில், ஆஷஸ் தொடருக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். 

hazlewood waiting to watch jason roys batting in test cricket

ராய், பட்லர், பேர்ஸ்டோ என அதிரடி மன்னர்கள் இங்கிலாந்து அணியில் உள்ள நிலையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர். பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஃபீல்டிங் அனைத்திலும் சிறந்த அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. 

அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் மற்றும் வார்னர் திரும்பியிருப்பது பெரிய பலம். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடைபெற்ற பான்கிராஃப்ட் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்கள் தவிர டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, மேத்யூ வேட் என ஆஸ்திரேலிய அணியும் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், பாட்டின்சன், ஹேசில்வுட் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளதோடு, ஸ்பின்னில் கலக்க நாதன் லயன் உள்ளார். 

hazlewood waiting to watch jason roys batting in test cricket

எனவே இரு அணிகளும் ஆஷஸ் போருக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், ஆஷஸ் போட்டி ஆரம்பிக்கப்படும் முன்னரே ஆஸ்திரேலிய அணி, அவர்களது வழக்கமான சைகலாஜிகல் அட்டாக்கை தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஹேசில்வுட், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை சீண்டியுள்ளார். 

ஜேசன் ராய் டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். அவர் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடிவிட்டு ஆஷஸுக்கு வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்குவது என்பது ஒருநாள் போட்டிகளில் இறங்குவதை போன்றது அல்ல. அதைவிட சற்று கடினம் என்று ஹேசில்வுட் பேசியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios