Asianet News TamilAsianet News Tamil

நம்ம கேப்டன் கோலிக்கு ஆப்படிக்க காத்திருக்கும் ஆம்லா!!

இந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருகிறார். இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

hashim amla has chance to break virat kohlis one of the odi records
Author
England, First Published Jun 2, 2019, 2:09 PM IST

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர்.

விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரோஹித் சர்மா, பட்லர், வார்னர், பேர்ஸ்டோ, டி காக், ஷாய் ஹோப் என பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர். பும்ரா, ரஷீத் கான், ரபாடா, ஆர்ச்சர் என சிறந்த இளம் பவுலர்களும் ஆடுகின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருகிறார். இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் சாதனையை முறியடித்துவருகிறார் கோலி. 

hashim amla has chance to break virat kohlis one of the odi records

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறார் கோலி. அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 8000 ரன்கள் குவித்த வீரராக கோலி தான் இதுவரை இருக்கிறார். 175 இன்னிங்ஸ்களில் கோலி 8000 ரன்களை அடித்துவிட்டார். 

hashim amla has chance to break virat kohlis one of the odi records

தற்போது அந்த சாதனையை முறியடிக்க தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ஆம்லாவிற்கு வாய்ப்புள்ளது. ஆம்லா இன்னும் 77 ரன்கள் அடித்தால் 8000 ரன்களை எட்டிவிடுவார். 172 இன்னிங்ஸ்களில் 7923 ரன்களை ஆம்லா அடித்துள்ளார். இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆம்லா ஆடினால், இது அவரது 173வது இன்னிங்ஸாக இருக்கும். இன்னும் 2 இன்னிங்ஸ்களில் 77 ரன்களை அடித்தால் கோலியின் சாதனையை ஆம்லா முறியடித்துவிடுவார். 

hashim amla has chance to break virat kohlis one of the odi records

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆம்லா, ஆர்ச்சரின் பவுன்ஸரில் ஹெல்மெட்டில் அடிவாங்கி பாதியில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆம்லா ஆடுவது உறுதியில்லை. ஆனாலும் இன்னும் 2 இன்னிங்ஸ்களில் 77 ரன்கள் அடித்தால் கோலியின் சாதனையை முறியடித்துவிடுவார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios