ஹரீஷ் ராஃப் முதல் இன்சமாம் உல் ஹக் வரையில் சண்டையில் ஈடுபட்ட டாப் 5 பாகிஸ்தான் வீரர்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகளுடன் பாகிஸ்தான் வெளியேறிய நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஷ் ராஃப் ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகளுடன் வெளியேறியது. இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்புவதற்கு பதிலாக வெவ்வேறு நாடுகளுக்கு சென்று ஓய்வில் இருந்து வருகின்றனர்.
அவர்களில் ஹரீஷ் ராஃப் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அப்போது தான் ரசிகர் ஒருவர் அவரை விமர்சனம் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹரீஷ் ராஃப் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அந்த ரசிகரை தாக்கவும் முயற்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில் இது குறித்து விளக்கம் அளிந்திருந்தார். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களுடன் சண்டையில் ஈடுபட்ட டாப் 5 பாகிஸ்தான் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…
இன்சமாம் உல் ஹக்:
டொரோண்டோவில் நடைபெற்ற போட்டியின் போது ரசிகர் ஒருவர் தொடர்ந்து இன்சமாம் உல் ஹக்கை பொட்டேட்டோ (உருளைக்கிழங்கு) என்றே அழைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இன்சமாம் உல் ஹக் தனது பொறுமையை இழந்து ரசிகரை பேட்டால் தாக்க முயன்றுள்ளார்.
ஆசிப் அலி – ஃபரீத் அகமது
ஆசிய கோப்பை 2022 தொடரின் போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆசிப் அலி மற்றும் ஃபரீத் அலி இருவரும் மோதலில் ஈடுபட்டனர். ஆசிப் அலி ஆட்டமிழந்த போது ஃபரீத் அகமது மீது பேட்டால் தாக்குதலில் ஈடுபட்டார். இது ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபரீத் அகமதுவை தாக்கியது.
அகமது ஷேஷாத் – தில்ஷன்
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் அகமது ஷேஷாத் இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷனிடம் நீங்கள் முஸ்லீம் அல்லாதவராக இருந்து முஸ்லீமாக மாறினால், உங்களது வாழ்க்கையில் என்ன செய்தாலும் நேராக சொர்க்கத்திற்கு செல்வீர்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.
தில்ஷன் ஆரம்பத்தில் ஒரு இஸ்லாம். அவரது பெயர், துவான் முகமது தில்ஷன். ஆனால், அவர் புத்த மதத்திற்கு மாறியதைத் தொடர்ந்து அவரது பெயரை திலகரத்னே முதியன்சேலாகே தில்ஷன் என்று மாற்றியுள்ளார்.
ஷாகீன் அஃப்ரிடி – கவுதம் காம்பீர்
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியின் போது ஷாகித் அஃப்ரிடி மற்றும் கவுதம் காம்பீர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காம்பீர் ஒரு ரன் எடுக்க ஓடிய போது அஃரிடியுடன் மோதியுள்ளார். இதனால், இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.