ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் பந்துவீசுவாரா இல்லையா என்பது குறித்த அப்டேட்டை அவரே தெரிவித்துள்ளார். 

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா:

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. கடந்த ஒருசில ஆண்டுகளாகவே ஃபிட்னெஸ் சரியில்லாததால் ஹர்திக் பாண்டியாவால் முன்பைப்போல் திறம்பட பந்துவீசமுடியவில்லை. அவரது ஃபிட்னெஸும் அவ்வப்போது கேள்விக்குறியாவதால் இந்திய அணியில் இடம் கிடைப்பதில்லை.

கடந்த ஐபிஎல் சீசன், டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் அவரால் பந்துவீசமுடியாததையடுத்து, ஃபிட்னெஸில் கவனம் செலுத்துமாறு கூறி இந்திய அணியிலிருந்து பிரேக் கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆல்ரவுண்டரான அவரால் பந்துவீச முடியாததால், இந்திய அணியில் அவருக்கான இடத்தை இழந்தார். அவர் இந்திய அணியில் இடம்பெறாத இடைக்காலத்தில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறந்த ஆல்ரவுண்டராக தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா ஃபிட்னெஸ்:

காயங்களிலிருந்து மீண்டு ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லில் ஆட வந்துள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு, இந்த சீசன் மிக முக்கியமானது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவந்த ஹர்திக் பாண்டியா, 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளார். இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்தால் மட்டுமே ஹர்திக் பாண்டியாவால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறமுடியும். எனவே, அந்தவகையில் இந்த ஐபிஎல் சீசன் ஹர்திக் பாண்டியாவிற்கு மிக முக்கியமானது.

சர்ப்ரைஸ்:

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த ஹர்திக் பாண்டியாவிடம், இந்த சீசனிலாவது பந்துவீசுவீர்களா என்று ரிப்போர்ட்டர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, அது சர்ப்ரைஸ்.. சர்ப்ரைஸ் சர்ப்ரைஸாகவே இருக்கட்டும் என்றார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது ஷமி, லாக்கி ஃபெர்குசன் மற்றும் ரஷீத் கான் ஆகிய உலகத்தரம் வாய்ந்த சிறந்த பவுலர்கள் உள்ளனர். அவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து பந்துவீசினால் அது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் பலமாக அமையும்.