2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, மிகக்குறுகிய காலத்தில் தனது அபாரமான திறமையாலும், சிறப்பான பங்களிப்பாலும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று விதமான அணிகளிலும் நிரந்தர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

முகுதுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக கோப்பைக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா பெரிதாக ஆடவேவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பெங்களூருவில் நடந்த போட்டியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் நடந்த வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடாமல் ஓய்வும் பயிற்சியும் பெற்று வந்தார். அடுத்ததாக நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியிலும் பாண்டியா இல்லை. ஆனால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான  இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். எனவே அப்படியே, நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் பாண்டியா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், செர்பியாவை சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியாவிற்கும் நடிகை நடாஷாவிற்கும் இடையே காதல் என்ற பேசப்பட்டது. இந்நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதை உறுதி செய்துள்ளார் பாண்டியா. 

நடிகை நடாஷா, பாலிவுட் திரைப்படங்களில் பாடல்களுக்கு நடனமாடிவருகிறார். தமிழில் வெளியான அரிமா நம்பியில் கூட ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடினாலும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் 8 சீசனில் கலந்துகொண்டு தனது செயல்பாடுகளால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். 

நடாஷாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே காதல் என்று பேசப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் படகில் வைத்து, நடிகை நடாஷாவுக்கு மோதிரம் அணிவித்து முத்தம் கொடுத்த தனது நிச்சயதார்த்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டிருப்பதுடன், நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Forever yes 🥰💍❤️ @hardikpandya93

A post shared by 🎀Nataša Stanković🎀 (@natasastankovic__) on Jan 1, 2020 at 4:42am PST