இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடிய அபாரமான வீரர். 

கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் உலக கோப்பையின்போது அதே மருத்துவர் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு சிகிச்சையளித்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் அதே மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றிருந்தார் பாண்டியா. 

அதனால் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய தொடர்களில் ஆடவில்லை. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடக்கவுள்ள தொடருக்கான இந்திய அணியிலும் பாண்டியா இல்லை. பும்ராவும் காயத்தால் இந்த தொடர்களில் ஆடவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் பும்ரா, தான் உடற்தகுதி பெற்றுவிட்டதை, அவர் போல்டு செய்த உடைத்த ஸ்டம்பின் புகைப்படத்தை பகிர்ந்து தனது கம்பேக்கை உறுதி செய்தார். 

இந்நிலையில், முழு உடற்தகுதியை பெற்றுவிட்ட ஹர்திக் பாண்டியா, ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, தனது கம்பேக்கை தெரிவித்துள்ளார்.