இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான முறையே டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியும் அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக ஆடி அபாரமாக ஸ்கோர் செய்துவரும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் எடுக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் ஹர்பஜன் சிங்கிற்கு உண்டு. அதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவிற்காக ஏற்கனவே டுவீட் செய்திருந்தார் ஹர்பஜன் சிங். 

Also Read - நாங்க நெனச்சது ஒண்ணு; ஆனால் நடந்தது ஒண்ணு.. ரிஷப் பண்ட் ரொம்ப சொதப்புறாரு.. வெளிப்படுத்திய தேர்வுக்குழு தலைவர்

இந்நிலையில், இப்போது பதிவிட்டுள்ள டுவீட்டில், சூர்யகுமார் யாதவ் என்ன தவறு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவரை ஏன் இந்தியா, இந்தியா ஏ, பி என எந்த அணியிலும் எடுப்பதில்லை. வெவ்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு விதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

ஆனால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் சூர்யகுமார் எடுக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் எடுக்கப்படாதது குறித்து மட்டும் கருத்து தெரிவித்திருந்தால் பிரச்னையில்லை. ஆனால் ஹர்பஜன், இந்தியா ஏ அணியிலும் எடுக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் போட்டிக்கான இந்தியா ஏ அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். 

இந்தியா ஏ அணி:

பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில்(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, அக்ஸர் படேல், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், இஷான் போரெல், கலீல் அகமது, முகமது சிராஜ்.