Asianet News TamilAsianet News Tamil

India vs New Zealand டி20 தொடர்: எந்த அணி தொடரை வெல்லும்..? ஹர்பஜன் சிங் ஆருடம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை எந்த அணி வெல்லும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

harbhajan singh predicts the result of india vs new zealand t20 series
Author
Chennai, First Published Nov 16, 2021, 8:52 PM IST

டி20 உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, அந்த தொடரை முடித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்துவிட்டது.

இந்தியா - நியூசிலாந்து இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. நாளை(17), 19 மற்றும் 21 ஆகிய 3 நாட்கள் டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இந்த தொடரில் வெற்றி பெறுவது 2 அணிகளுக்குமே முக்கியம். அந்தவகையில், டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவருவதால் விராட் கோலி, பும்ரா, ஷமி ஆகிய இந்திய சீனியர் வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்திய அணி புதிய கேப்டன் (ரோஹித் சர்மா) மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் (ராகுல் டிராவிட்) ஆகியோரின் வழிகாட்டுதலில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகிய இளம் வீரர்களுடன் ஆடவுள்ளது.

ராகுல் டிராவிட் - ரோஹித் சர்மா இணை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தொடர் அவர்கள் வழிகாட்டுதலில் ஆடும் முதல் தொடர் என்பதால் இதில் வெற்றி பெற்று வெற்றியுடன் பயணத்தை தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில், இந்த டி20 தொடரை எந்த அணி வெல்லும் என ஆருடம் தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்திய அணி தான் 2-1 என டி20 தொடரை வெல்லும் என்றும், இந்த தொடரில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரின் ஆட்டத்தையும் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios