இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிலையில், வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது.

இந்நிலையில், இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பிரச்னை குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், இந்திய அணி 2 அல்லது 3 வீரர்களையே அதிகமாக சார்ந்திருப்பதை நிறுத்த வேண்டும். 2019 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தான் முக்கியமான வீரராக இருந்தார். அவரையே இந்திய அணி அதிகமாக சார்ந்திருந்தது; கோலியும் இருந்தார். இவர்கள் இருவரையே அதிகமாக சார்ந்திருந்தது. ஆனால் அதிகமான மேட்ச் வின்னர்களை அணியில் பெற்றிருக்க வேண்டும். உலக கோப்பையை வெல்ல, ரோஹித் மற்றும் கோலியை சுற்றி நிறைய மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

அழுத்தம் அதிகமான போட்டிகளில் நெருக்கடியான சூழல்களில் ரோஹித்தும் கோலியும் அவுட்டாகிவிட்டால், மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். கேஎல் ராகுல் சிறப்பாக ஆடுகிறார். அவரை மாதிரி நிறைய வீரர்களை ரோஹித் மற்றும் கோலியை சுற்றி உருவாக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.