Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் மேட்ச் வின்னர் அவருதான்..! ஹர்பஜன் சிங் அதிரடி

இந்திய அணியின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் யார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
 

harbhajan singh picks anil kumble is the best indian cricketer and match winner ever
Author
Chennai, First Published Jun 21, 2020, 4:46 PM IST

இந்திய கிரிக்கெட் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பேட்டிங் அணியாக திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் பவுலிங்கை விட எப்போதுமே பேட்டிங் தான் சிறப்பாக இருந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லட்சுமணன், யுவராஜ் சிங் என சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி, இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி, தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் என சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. இதற்கிடையே, ரெய்னா உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்துள்ளனர்.

ஆனால் எத்தனையோ தலைசிறந்த பேட்ஸ்மேன்களை பெற்றிருந்தாலும், பவுலர்களின் உதவியில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் வெல்ல முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஒரு அணியால் டெஸ்ட் போட்டியில் ஜெயிக்க முடியும். இப்போதைய இந்திய அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு, பும்ரா, ஷமி, இஷாந்த், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது தான் காரணம். 

harbhajan singh picks anil kumble is the best indian cricketer and match winner ever

அந்தவகையில், இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் சச்சினோ, டிராவிட்டோ இல்லை என்பதும் அனில் கும்ப்ளே தான் இந்தியாவின் தலைசிறந்த மேட்ச் வின்னர் என்பதும் ஹர்பஜன் சிங்கின் கருத்து. 

அனில் கும்ப்ளே, இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1999ல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார். 

மிகச்சிறந்த லெக் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே ஆடிய அதே காலக்கட்டத்தில் அவருடன் இணைந்து நிறைய போட்டிகளில் ஆடும் பாக்கியத்தை பெற்றவர் ஹர்பஜன் சிங். அனில் கும்ப்ளேவின் ஸ்பின் ஜோடியாக ஆடியவர் ஹர்பஜன் சிங். 

harbhajan singh picks anil kumble is the best indian cricketer and match winner ever

இந்நிலையில், அனில் கும்ப்ளே குறித்து ஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். அனில் கும்ப்ளே குறித்து பேசிய ஹர்பஜன் சிங், என்னை பொறுத்தமட்டில் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் அனில் கும்ப்ளே தான். இந்தியாவிற்காக ஆடியதிலேயே மிகச்சிறந்த வீரரும் அவர் தான். அவரது பந்து சுழன்று திரும்பாது என்று பலர் விமர்சித்திருக்கிறார்கள். பந்தை சுழற்றி திருப்பாவிட்டாலும், பேட்ஸ்மேனை அவுட்டாக்க முடியும் என்பதை செய்துகாட்டியவர் அனில் கும்ப்ளே. 

harbhajan singh picks anil kumble is the best indian cricketer and match winner ever

அவருடன் இணைந்து நிறைய ஆண்டுகள் ஆடியது எனது அதிர்ஷ்டம். மிகுந்த அர்ப்பணிப்பான வீரர் அனில் கும்ப்ளே என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். 

அனில் கும்ப்ளே 2007-08ம் ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். 2016-17 காலக்கட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios