வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
அடுத்ததாக டி20 தொடர் நடக்கவுள்ளது.3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கின்றன. நாளை முதல் போட்டி நடக்கிறது.
டி20 தொடரில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று முன்னாள் சுழல் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், என்னை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் இஷான் கிஷன் தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும். இஷான் கிஷனை ஓபனிங்கிற்கு தயார்படுத்தவெல்லாம் தேவையில்லை. அவர் ஏற்கனவே தயாராகத்தான் இருக்கிறார். எனவே அவரை அணியில் கண்டிப்பாக சேர்த்து, ஓபனிங்கில் இறக்கிவிட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் ராகுலால் 5ம் வரிசையில் பேட்டிங் ஆடமுடியும் என்றால், டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஏன் முடியாது.
ஒருநாள் போட்டிகளில் பின்வரிசையில் இறங்கி பெரிய ஷாட்டுகளை ஆடவல்லவர் கேஎல் ராகுல். பவர்ப்ளேயில் இஷான் கிஷன் மாதிரியான பயமற்ற வீரர் பேட்டிங் ஆடுவது அணிக்கு நல்லது என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்குவதற்காகத்தான் இஷான் கிஷனை ஏலத்தில் ரூ.15.25 கோடி கொடுத்து எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
