IPL 2023: RCB vs DC கை கொடுக்காமல் சென்ற சம்பவம்; இன்ஸ்டாவில் கங்குலியை Unfollow செய்த விராட் கோலி!
டெல்லிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலிக்கு, சவுரவ் கங்குலி கை கொடுக்காமல் விட்டுச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாவில் கங்குலியை, விராட் கோலி Unfollow செய்துள்ளார்.
பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி கடந்த 15 ஆம் தேதி நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
பின்னர், இந்த மைதானத்திற்கு எளிய ஸ்கோரான 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட டெல்லி கேபில்டஸ் அணி களமிறங்கியது. இதில், மணீஷ் பாண்டே மட்டும் பொறுப்பாக ஆடி 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெள்யேறினர். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் 5ஆவது தோல்வியாகும்.
டெல்லி அணி பேட்டிங் ஆடிய போது அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் அமன் கான் ஆகியோர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். அதுமட்டுமின்றி வெளியில் அமர்ந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி உள்பட அங்கு அமர்ந்திருப்பவர்களை வம்பிழுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அங்கு டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங், சவுரங் கங்குலி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதோடு, அவர்களை முறைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, இறுதியில் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை கொடுத்தனர். அப்போது, சவுரங் கங்குலி ஒவ்வொருவருக்கும் கை கொடுத்துவிட்டு வந்தார். ஆனால், அவர் விராட் கோலிக்கு மட்டும் கை கொடுக்கவில்லை. அப்படியே ஒதுங்கி சென்றுவிட்டார். போட்டியில் வெற்றியும், தோல்வியும் சகஜம் தான். ஆனால், அந்த போட்டியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றவர்களுக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடாது. ஆனால், விராட் கோலி இது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டதால் சவுரங் கங்குலி இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், சவுரங் கங்குலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி Unfollow செய்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்திய டி20 கேப்டனாக இருந்த விராட் கோலி ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே நேரத்தில் அவர் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று விராட் கோலியிடம் கோரியிருந்ததாக அப்போது பிசிசிஐ தலைவராக இருந்தார் கங்குலி கூறியிருந்தார்.
IPL 2023: பெங்களூருவில் சாதனைக்கு கிங் தோனி; அதிக ரன்கள் எடுத்தவர்களில் நம்பர் ஒன் இடம்!
இருப்பினும், இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, விராட் கோலி, கங்குலியின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்தார். என்னை ODI கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்தனர். அதற்கு நான் சரி சரி என்று பதிலளித்தேன். ஆனால், அது குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அதே போன்று டி20 போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்து என்னிடம் விலக வேண்டும் என்று கூறியதாக கங்குலி கூறியது பொய்யான கூற்று என்று கோலி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.