மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதலிடம் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் இரு அணிகள் மோதும் போட்டி இது. 

மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா, அந்த போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது. 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், பிரதீப் சங்வான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ரித்திக் ஷோகீனுக்கு பதிலாக முருகன் அஷ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ஜஸ்ப்ரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்.