பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். மற்ற அணிகள் அனைத்தும் டாஸ் வென்று கண்ணை மூடிக்கொண்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்யும் நிலையில், ஹர்திக் பாண்டியா ஏற்கனவே ஒருமுறை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து டிரெண்ட் செட் செய்த நிலையில், இப்போது மீண்டும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 2 அணிகளிலுமே எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரு அணிகளுமே கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், பிரதீப் சங்வான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.
