ஐபிஎல் டிரெண்ட் ஒர்க் அவுட்டாகுமா? GT vs SRH வெற்றி யாருக்கு?

அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது, பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Gujarat Titans and Sunrisers Hyderabad Clash today in IPL 12th Match at Ahmedabad rsk

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சிசனீல் இதுவரையில் நடந்த 11 போட்டிகள் முடிவுகளின் படி அந்தந்த ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

அதன்படி இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த சீசனில் இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் ஒன்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்வி அடைந்துள்ளது.

மேலும், இந்த 2 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் இதுவரையில் விளையாடிய 2 போட்டிகளிலும் ஒன்றில் வெற்றியும், ஒன்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.

மேலும், மும்பைக்கு எதிராக நடந்த போட்டியில் 168 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் இரு அணிகளும் மோதிய, 3 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அதிகபட்சமாக 199 ரன்களும், குறைந்தபட்சமாக 162 ரன்களும் எடுத்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios