குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும்  இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் அபாரமாக விளையாடி தொடர் வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியோ, அதற்கு நேர்மாறாக படுமோசமாக ஆடி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை ஆகிய 2 அணிகளும் இன்று மோதுகின்றன.

மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

குஜராத் டைட்டன்ஸ் அணியில் பிரதீப் சங்வான் - யஷ் தயால் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். மற்ற 10 வீரர்களில் எந்த மாற்றமும் இருக்காது.

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், பிரதீப் சங்வான்/யஷ் தயால், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் 10 வீரர்கள் உறுதி. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் டிம் டேவிட் - டிவால்ட் ப்ரெவிஸ் ஆகிய இருவரும் ஒருவர் ஆடுவார்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிவால்ட் பிரெவிஸ்/டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, ரித்திக் ஷோகீன், டேனியல் சாம்ஸ், ஜஸ்ப்ரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்.