Asianet News TamilAsianet News Tamil

AUS vs NZ முதல் ODI: நியூசிலாந்தின் மிடில் ஆர்டரை கொத்தா தூக்கிய மேக்ஸ்வெல்..! ஆஸ்திரேலியாவிற்கு எளிய இலக்கு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 232 ரன்கள் அடித்து, 233 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.
 

glenn maxwell super bowling against new zealand helps to restrict them for 232 runs in first odi
Author
First Published Sep 6, 2022, 2:16 PM IST

ஜிம்பாப்வே அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்னஸ் லபுஷேன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க - Asia Cup: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி.. ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுவது எப்படி..? இதோ ரூட்மேப்

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரைல் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், மேட் ஹென்ரி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே சிறப்பாக பேட்டிங் ஆடிய நிலையில், 46 ரன்களுக்கு ஆடம் ஸாம்பாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்து 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். 

3 மற்றும் 4ம் வரிசைகளில் இறங்கி பொறுப்புடன் ஆடிய கேன் வில்லியம்சன் (45) மற்றும் டாம் லேதம் (43) ஆகிய இருவரையும் க்ளென் மேக்ஸ்வெல் தனது சுழலில் வீழ்த்தினார். டேரைல் மிட்செல் (26) மற்றும் பிரேஸ்வெல்(7) ஆகியோரையும் மேக்ஸ்வெல்லே வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கை மொத்தமாக கொத்தாக வீழ்த்தினார் மேக்ஸ்வெல். 

இதையும் படிங்க - Asia Cup: அர்ஷ்தீப் சிங்கால் தப்பிய புவனேஷ்வர் குமார்

அதன்பின்னர் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, 50 ஓவரில் 232 ரன்கள் அடித்து, 233 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்துவீசிய க்ளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios