வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம்: ஸ்டெம்ப் சாய்ந்து பெயில்ஸ் கிழே விழாததால் பேட்ஸ்மேன் நாட் அவுட்!

ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியின் போது பந்து வீச்சாளர் ஸ்டெம்பை பதம் பார்த்த போதும் கூட பைல்ஸ் கீழே விழாத நிலையில், பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டுள்ளது.

Ginninderra vs Tigers: middle Stump knocked back but bails not down batsman escaped from out in ACT Premier Cricket Third Grade competition rsk

ஆஸ்திரேலியாவில் ACT பிரீமியர் கிரிக்கெட், ஒரு மூன்றாம் தரப் போட்டி தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் போது பந்து வீச்சாளர் ஸ்டெம்பை பதம் பார்த்த நிலையில், பேட்ஸ்மேன் அவுட் என்று நினைத்துக் கொண்டே வெளியேறிய போது நடுவர் நாட் அவுட் கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஏசிடி பிரீமியர் கிரிக்கெட் தொடரில் கின்னின்டெர்ரா மற்றும் டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கின்னிண்டெரா அணியின் பந்து வீச்சாளர் ஆண்டி ரெனால்ட்ஸ் பந்து வீசினார். அப்போது டைகர்ஸ் அணியின் மேத்யூ போஸ்டோவ் களத்தில் பேட்டிங் செய்தார்.

IPL 2024, Delhi Capitals Squad: ஐபிஎல் 2024ல் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் யார்?

ரெனால்ட்ஸ் வீசிய பந்து மிடில் ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதில், ஸ்டெம்பை கீழே சாய்ந்தது. ஆனால், விழவில்லை. இதனால் மேத்யூவை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் அந்த அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஆட்டமிழந்த நிலையில் மேத்யூ நடையை கட்டினார். ஆனால், பெயில்ஸ் மட்டும் கீழே விழாததால், நடுவரிடம் கேட்க, அதற்கு நடுவரோ அவுட் கொடுக்கவில்லை. பேட்ஸ்மேன் நாட் அவுட் என்று கூறவே, அவுட் என்று நினைத்துக் கொண்டு நடையை கட்டிய மேத்யூ மீண்டும் களத்திற்குள் வந்தார்.

WPL 2024, Gujarat Giants: 20 வயதில் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட அன்கேப் வீராங்கனை கேஷ்வி கவுதம்!

இது போன்ற நாட் அவுட் சம்பவம் இதற்கு முன்னதாக கிரிக்கெட்டில் நடந்ததாக தெரியவில்லை. மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விதிமுறையின் படி பேட்ஸ்மேன் கிளீன் போல்டாகி அவுட்டாக வேண்டுமென்றால் 2 பைல்ஸ்களில் ஒன்றாவது கீழே விழ வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு ஸ்டெம்ப் தரையில் விழ வேண்டும். ஆனால், இந்தப் போட்டியில் இது போன்ற எந்த நிகழ்வும் நடக்கவில்லை. ஆதலால், பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியஸ் அணியில் ரூ.10 லட்சத்திற்கு இடம் பெற்ற சென்னை டாக்ஸி டிரைவரின் மகள் கீர்த்தனா பாலகிருஷ்ணன்!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios