உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளையுடன் உலக கோப்பை தொடர் முடிவடைகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

அதற்காக இரு அணிகளும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்திய அணியை போராடி வீழ்த்திய நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டா வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் மட்டுமே அடித்தது. 224 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அசால்ட்டாக அடித்து 33வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. குறிப்பாக ராய், தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி, முதல் சில ஓவர்களிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டார். வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இங்கிலாந்து அணி, இலக்கை 33 வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி ஈசியாக வெற்றி பெற்ற திமிரில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஆஸ்திரேலிய பவுலர்கள் வெறும் காலில் ஓடிவந்து பந்துவீசியிருக்கலாம் என்று நக்கலாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதைக்கண்டு கடும் கோபமடைந்த ஆடம் கில்கிறிஸ்ட், முட்டாள் என மைக்கேல் வானுக்கு பதிலடி கொடுத்தார். 

கிரிக்கெட் உலகில் ஜெண்டில்மேன் என்றழைக்கப்படும் கில்கிறிஸ்ட்டையே கடுப்பேற்றி முட்டாள் என திட்டு வாங்கியுள்ளார் மைக்கேல் வான். அண்மையில் மைக்கேல் வானை இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் டுவிட்டரில் ப்ளாக் செய்தது குறிப்பிடத்தக்கது.