Asianet News TamilAsianet News Tamil

இதையெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்கவே மாட்டீங்களா..? கவாஸ்கர் அதிரடி

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 
 

gavaskar discontent about no left handed batsman in indian middle order batting
Author
India, First Published Apr 16, 2019, 2:27 PM IST

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணியில் 12 வீரர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதுதான். நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்கள் தான் இழுபறியாக இருந்தது. கடைசியில் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக யாரையுமே தேர்வு செய்யவில்லை. 

நான்காம் வரிசை வீரராக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுலிங் ஆப்சன் கூடுதலாக கிடைப்பதுடன் அவர் நல்ல ஃபீல்டரும் கூட என்பதால் அவரை அணியில் எடுத்துள்ளனர். 

gavaskar discontent about no left handed batsman in indian middle order batting

அதேபோல மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் எடுக்கப்படுவார் என கருதப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளனர். ரிஷப் பண்ட்டுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ரிஷப் பண்ட்டை எடுப்பதுபோன்ற தோற்றத்தைத்தான் தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் ஏற்படுத்தியது. ஆனால் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் சொதப்பலாக இருந்ததால், விக்கெட் கீப்பிங்கை கருத்தில் கொண்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டுள்ளார். 

gavaskar discontent about no left handed batsman in indian middle order batting

எனினும் ரிஷப் பண்ட்டுக்கே பல முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனே இல்லை என்பதால், ரிஷப் பண்ட்டின் மூலம் அந்த குறையை தீர்க்கலாம் என ஏற்கனவே கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் நல்ல ஃபார்மில் இருந்தும்கூட அவரை அணியில் எடுக்காததால் கவாஸ்கர் அதிருப்தியடைந்துள்ளார். 

gavaskar discontent about no left handed batsman in indian middle order batting

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ரிஷப் பண்ட் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், அவரை உலக கோப்பை அணியில் எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. ஐபிஎல்லில் மட்டுமல்லாமல் அதற்கு முன்னதாகவும் நன்றாகவே ஆடினார். விக்கெட் கீப்பிங்கிலும் நிறைய மேம்பட்டிருக்கிறார். அப்படியிருக்கையில் அவரை எடுக்காதது வியப்பானதுதான். முதல் 6 பேட்ஸ்மேன்களில் தவான் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன். மிடில் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேன் கூட இடது கை பேட்ஸ்மேன் கிடையாது. இடது - வலது பேட்டிங் இணை பேட்டிங் ஆடும்போது எதிரணி பவுலருக்கும் சிரமம். ஃபீல்டிங் செட் செய்வதில் எதிரணி கேப்டனுக்கும் அதிக பளு இருக்கும். அதனடிப்படையில், இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் மிடில் ஆர்டரில் இருப்பது அவசியம். ஆனால் ரிஷப் பண்ட் எடுக்கப்படாதது ஆச்சரியம்தான் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios