Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் அவரை இறக்குறதுதான் டீமுக்கு நல்லது.. கம்பீர் அதிரடி

டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

gautam gambhir wants kl rahul will open with rohit sharma in t20 world cup
Author
India, First Published Jan 6, 2020, 5:58 PM IST

டி20 உலக கோப்பைக்கான பெஸ்ட் 11 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்வதற்காக பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. கேஎல் ராகுல் கடந்த சில தொடர்களில் அபாரமாக ஆடியதுடன், டாப் ஃபார்மில் இருப்பதால் அவரைத்தான் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. 

ரோஹித் சர்மா -  ஷிகர் தவான் தொடக்க ஜோடி, இந்திய அணிக்காக பல சிறப்பான தொடக்கங்களை அமைத்து கொடுத்து, அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வெற்றிகரமான ஜோடி தான். ஆனால் தவான் அண்மைக்காலமாக சரியாக ஆடவில்லை. உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்த தவான், அந்த போட்டியில் காயமடைந்ததால், உலக கோப்பையில் பாதியில் வெளியேறினார். 

gautam gambhir wants kl rahul will open with rohit sharma in t20 world cup

அதன்பின்னர் சிகிச்சையில் இருந்த அவர், காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவதற்குள், அதற்கிடையே தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தினார் கேஎல் ராகுல். காயத்திலிருந்து மீண்டு வந்த தவான், மீண்டும் அணியில் இடம்பிடித்தாலும், அவர் சரியாக ஆடவில்லை. மந்தமாகவும் பந்துக்கு நிகராக ரன் அடித்து படுமோசமாகவும் ஆடினார். சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடியபோது மீண்டும் காயமடைந்தார் தவான். ஏற்கனவே மோசமாக ஆடி, அணியில் கொஞ்சம் கொஞ்சமாக தனது இடத்தை இழந்துவந்த தவானுக்கு, இந்த காயம் பெருத்த ஆப்பாக அமைந்தது. 

இந்த காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த தவான், நீக்கப்பட்டார். அதனால் அந்த தொடரில் ரோஹித்துடன் தொடக்க வீரராக ஆட கிடைத்த வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்தி அதிரடியாக ஆடி ரன்களை வாரிக்குவித்தார் கேஎல் ராகுல். அந்த தொடரில் அவரது பேட்டிங்கை கண்டு அனைத்து முன்னாள் வீரர்களுமே உலக கோப்பைக்கான டி20 அணியில் ராகுல் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று குரல் கொடுத்துவருகின்றனர். 

gautam gambhir wants kl rahul will open with rohit sharma in t20 world cup

இந்நிலையில், கடந்த ஆண்டு முழுவதும் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஆடிவந்த ரோஹித் சர்மாவிற்கு, இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே தவானும் ராகுலும் தான் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும். கவுகாத்தியில் 5ம் தேதி நடக்கவிருந்த போட்டி மழையால் ரத்தானது. 

இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த போட்டிகளில் சிறப்பாக ஆடும் முனைப்பில் உள்ளார் தவான். அபாரமாக ஆடி ஃபார்முக்கு திரும்பி, மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்ற முனைப்பில் தவான் இருக்கிறார். ஆனால் இந்த தொடரில் அவர் எவ்வளவுதான் ரன் அடித்தாலும், டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் ராகுல் தான் இறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் திட்டவட்டமாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஸ்ரீகாந்த் இந்த கருத்தை தெரிவித்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கிலத்தில் அதே பரிந்துரையை செய்தார். இதுகுறித்து பேசிய கம்பீர், ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை அடித்துள்ளார் ராகுல். இதைவிட ஒரு பேட்ஸ்மேனிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர் அசால்ட்டாக 70-80 ரன்களுக்கு மேல் அடிக்கிறார். தொடர்ச்சியாக பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறார். தவான் அதுமாதிரி பெரிய இன்னிங்ஸ்லாம் ஆடமாட்டார். ரோஹித், ராகுல், கோலி ஆகிய மூவரும் டாப் 3 பேட்ஸ்மேன்களாக இருந்தால், மூவரில் ஒருவர் நின்று இந்திய அணிக்கு கண்டிப்பாக வெற்றியை பெற்று கொடுத்துவிடுவார். அதனால் ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios