Asianet News TamilAsianet News Tamil

அந்த ஒரு திறமைதான் கோலியை ரோஹித், டிவில்லியர்ஸிடம் இருந்து உயர்த்தி பிடிக்குது..! கம்பீர் ஓபன் டாக்

விராட் கோலியிடம் இருக்கும் ஒரு திறமை மட்டும் ரோஹித்திடம் இல்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

gautam gambhir reveals what quality differentiate kohli with rohit and de villiers
Author
Delhi, First Published Jun 15, 2020, 7:57 PM IST

ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவரும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். விராட் கோலி மூன்றுவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். விராட் கோலியின் கெரியர் முடிவதற்குள் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை சீராக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

ரோஹித் சர்மா இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க தொடங்கியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபாரமான வீரர்.  அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 என்ற அசாத்திய அதிகபட்ச ஸ்கோருடன் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் நடப்பதே வேறு என்பதும், அன்றைய தினம் ரோஹித் சர்மாவுக்கானது என்பதும், பெரிய இன்னிங்ஸை ஆடி பெரிய ஸ்கோரை அடிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

gautam gambhir reveals what quality differentiate kohli with rohit and de villiers

சர்வதேச அளவில் விராட் கோலிதான் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்பட்டாலும், அவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ரோஹித் சர்மா. விராட் கோலி ஆடுவது மாதிரியான இன்னிங்ஸை ரோஹித் ஆடியிருக்கிறார். ஆனால் ரோஹித் மாதிரியான அசாத்திய இன்னிங்ஸை கண்டிப்பாக கோலியால் ஆடமுடியாது. அதேவேளையில், கோலியிடம் இருக்கும் ஒரு திறமை ரோஹித்திடம் இல்லை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் ரோஹித் சர்மா தான் என்று ஏற்கனவே அவரை பாராட்டியிருந்த கம்பீர், கோலியிடம் இருக்கும் ஒரு திறமை ரோஹித்திடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், பேட்ஸ்மேன்களுக்கு இடையில் மனநிலையை தவிர வேறு எந்த வித்தியாசமுமே கிடையாது. பேட்டிங் டெக்னிக்கெல்லாம் ஒன்றுதான். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. கவர் டிரைவ் யார் அடித்தாலும் கவர் டிரைவ் தான்.

gautam gambhir reveals what quality differentiate kohli with rohit and de villiers

ரோஹித் - கோலியை பொறுத்தமட்டில், கோலியிடம் இருப்பதில் ரோஹித்திடம் இல்லாத ஒரே ஒரு குவாலிட்டி என்றால், அது ஸ்டிரைக் ரொடேட் செய்வதுதான். ரோஹித் சர்மா பெரிய ஷாட்டுகளை சிறப்பாக ஆடுவார். ஆனால் அவரால் கோலியை போல் சிங்கிள் ரொடேட் செய்து ஆடமுடியவில்லை. கோலி ஸ்டிரைக் ரொடேட் செய்வதால் தான், அவரால் எல்லா போட்டிகளிலுமே ரன்களை குவிக்க முடிகிறது. அந்த ஒரு விஷயம் தான், கோலியை, ரோஹித் சர்மா, கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகிய வீரர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அதனால் தான் அவரை மற்றவர்களை விட வெற்றிகரமான மற்றும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios