கவுதம் கம்பீரும் ஷாகித் அஃப்ரிடியும் கிரிக்கெட் ஆடிய காலத்தில் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கம்பீர் - அஃப்ரிடி மோதல் மிகப்பிரபலம். களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் கருத்தியல் ரீதியாக இருவரின் மோதலும் தொடர்ந்துவருகிறது. 

அஃப்ரிடி எப்போதுமே இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர் குறித்தும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பது வழக்கம். அஃப்ரிடி சர்ச்சையாக பேசும்போதெல்லாம், அவருக்கு கம்பீர் தக்க பதிலடி கொடுத்துவிடுவார். 

அந்தவகையில், இப்போது மீண்டுமொரு முறை அது நடந்துள்ளது. இதற்கு காரணமும் அஃப்ரிடிதான். ஆரம்பித்தது அஃப்ரிடி தான்; அசிங்கப்பட்டதும் அஃப்ரிடிதான். அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரு கிராமத்திற்கு சென்ற அஃப்ரிடி, இது அழகான ஒரு கிராமம். இங்கு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கு வர வேண்டும் என நீண்டகாலமாக நினைத்தேன். இன்றுதான் வர முடிந்தது. உலகமே கொடும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட மோசமான நோய் மோடியின் மைண்ட் தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

அஃப்ரிடியின் இந்த கருத்திற்கு ஒரு குடிமகனாகவே செம பதிலடி கொடுத்திருப்பார் கம்பீர். அப்படியிருக்கையில், தற்போது பாஜக எம்பியாக இருக்கும் கம்பீர், அஃப்ரிடியை சும்மா விடுவாரா? அஃப்ரிடியுடன் சேர்த்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் இழுத்து கிழி கிழியென கிழித்துவிட்டார். 

அஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்து கம்பீர் பதிவிட்டுள்ள டுவீட்டில், பாகிஸ்தானின் 7 லட்சம் ஃபோர்ஸுக்கு 20 கோடி மக்கள் ஆதரவாக இருப்பதாக 16 வயது அஃப்ரிடி(நக்கலாக) கூறுகிறார். இருந்தும் 70 ஆண்டுகளாக காஷ்மீருக்காக பிச்சையெடுக்கிறீர்கள். அஃப்ரிடி, இம்ரான் கான் போன்ற ஜோக்கர்கள், இந்தியாவுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் விஷத்தை கக்குகிறார்கள். காஷ்மீரை வைத்தே, பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்காதீர்கள் என்று கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். 

எத்தனை முறை கம்பீரிடம் அசிங்கப்பட்டாலும் அஃப்ரிடிக்கு அறிவே வருவதில்லை.