Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 2020: அவரு வேற டீம்ல ஆடியிருந்தால் அவரோட லெவலே வேற.. சன்ரைசர்ஸ் சரியா யூஸ் பண்ணாம வேஸ்ட் பண்றாங்க

ஐபிஎல்லில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் முகமது நபி என்றும் அவர் வேறு அணியில் ஆடியிருந்தால், மிகப்பெரிய மேட்ச் வின்னராக ஜொலித்திருப்பார் என்றும் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

gautam gambhir opines that mohammad nabi will play all 14 matches if he play for another franchise in ipl
Author
UAE, First Published Sep 14, 2020, 8:01 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவரும் ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபியை அந்த அணி அனைத்து போட்டிகளிலும் ஆடவைக்க வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

முகமது நபி ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவருகிறார். 2017லிருந்து இதுவரை அவர் மொத்தமாகவே வெறும் 13 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 

gautam gambhir opines that mohammad nabi will play all 14 matches if he play for another franchise in ipl

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், ரஷீத் கான் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் இருப்பதால் முகமது நபிக்கு அனைத்து போட்டிகளிலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஆனால் அவர் ஆடிய வெறும் 13 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பு செய்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 13 ஐபிஎல் போட்டிகளில், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நபி, 148.35 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 135 ரன்களும் அடித்துள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக ஆடியுள்ளார். கடந்த சீசனில் கூட, ஒரு போட்டியில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

gautam gambhir opines that mohammad nabi will play all 14 matches if he play for another franchise in ipl

இந்நிலையில், முகமது நபிக்கு அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன், ரஷீத் கான் என மிகப்பெரிய வீரர்கள் உள்ள அணியில் முகமது நபி இருப்பதால் தான் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. நபி வேறு ஏதாவது அணியில் இருந்திருந்தால், அவருக்கு 14 போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கும்.

gautam gambhir opines that mohammad nabi will play all 14 matches if he play for another franchise in ipl

Also Read - ஐபிஎல் 2020: சிஎஸ்கேவையே அச்சுறுத்தும் அசுர பலத்துடன் டெல்லி கேபிடள்ஸ்.. அல்லு தெறிக்கும் எதிரணிகள்

நபியை 14 போட்டிகளிலும் ஆட வைத்தால் தான் அவரால் ஆட்டத்தில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்பதை அறியமுடியும். என்னை பொறுத்தமட்டில் ஐபிஎல்லில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் முகமது நபி. பொல்லார்டு, டிவில்லியர்ஸ், ரஷீத் கான், வார்னர் ஆகியோருக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தகூடிய வீரர் நபி என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios