Asianet News TamilAsianet News Tamil

#IPL2021Auction சிஎஸ்கே அணி இந்த 3 வீரர்களையும் தட்டி தூக்கணும்..! கம்பீர் அதிரடி

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி 3 வீரர்களை எடுக்கலாம் என்று தனது பரிந்துரையை வழங்கியுள்ளார் கவுதம் கம்பீர்.
 

gautam gambhir opines csk players selection in ipl 2021 auction
Author
Chennai, First Published Feb 15, 2021, 8:45 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.  அனைத்து அணிகளும் இந்நேரம் தாங்கள் ஏலத்தில் எடுக்க வேண்டிய வீரர்களை முடிவு செய்திருக்கும். சாம்பியன் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணியில் கடந்த சில சீசன்களில் ஆடிய ஷேன் வாட்சன் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் ஆகிய வீரர்களை சிஎஸ்கே கழட்டிவிட்டுள்ளது.

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே, கடந்த சீசனில் தான் முதல் முறையாக, பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த சீசனில் மெகா ஏலம் நடந்தால் அணியை மறுகட்டமைப்பு செய்யலாம் என்ற திட்டத்தில் இருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் மெகா ஏலம் அடுத்த ஆண்டுதான் நடக்கவுள்ளது. இந்த சீசனிற்கு சிறிய ஏலமே நடக்கவுள்ளது. கோர் டீம் வலுவாக இருப்பதால், எப்போதுமே தங்கள் அணிக்கு தேவையான ஒரு சில வீரர்களை மட்டும் குறிவைத்து தூக்கும் சிஎஸ்கே, இம்முறையும் அதையே தான் செய்யும்.

gautam gambhir opines csk players selection in ipl 2021 auction

இந்நிலையில், சிஎஸ்கே அணி ஏலம் குறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், ரெய்னா, உத்தப்பா, ராயுடு, தோனி என சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் அனுபவம் நிறைந்ததாக உள்ளது. ஹர்பஜன் சிங்கை கழட்டிவிட்டுள்ள சிஎஸ்கே அணி, அவரது இடத்திற்கு ஆஃப் ஸ்பின்னரான கிருஷ்ணப்பா கௌதமை பரிசீலிக்கலாம். கௌதம் பேட்டிங்கும் ஆடக்கூடியவர். பிராவோவிற்கு வயதாகிக்கொண்டே செல்கிறது. எனவே அவருக்கு பேக்கப் ஆல்ரவுண்டராக கிறிஸ் மோரிஸை பார்க்கலாம். அதேபோல தீபக் சாஹருக்கு ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னராக உமேஷ் யாதவை எடுக்கலாம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios