ஆஸி.,க்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் படுமோசமாக சொதப்பியதால், 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

2வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு ஊக்கமளிக்கும் விதமாக கம்பீர் பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், முதல் டெஸ்ட்டின் முதல் 2 நாட்கள் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதை நினைவில் கொள்ள வேண்டும். ஓரேயொரு மோசமான செசன் தான் போட்டியின் முடிவை மாற்றிவிட்டதே தவிர, 2 நாட்கள் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொண்டு, மீண்டெழ வேண்டும்.

இந்திய அணியின் மிகச்சிறந்த வீரரும் கேப்டனுமான கோலி இல்லாதது பெரும் இழப்புதான். எனவே ரஹானேவிற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்றும் கம்பீர் தெரிவித்தார்.