Asianet News TamilAsianet News Tamil

அது தெரிஞ்ச விஷயம்தானே.. அதுல ஆச்சரியப்படுறதுக்கு எதுவும் இல்ல.. தாதா தடாலடி

2020 அக்டோபரில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது இந்திய அணி நிர்வாகம். 

ganguly speaks about dhonis omission in t20 squad
Author
India, First Published Sep 2, 2019, 12:30 PM IST

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலக கோப்பைக்கு பின்னும் அவர் மௌனம் காத்ததால், அவரது ஓய்வு குறித்த விவாதம் வலுத்தது. தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என்றாலும், அவருக்கு அணியில் இடமில்லை என்பதை தேர்வுக்குழு வெளிப்படையாகவே தெரிவித்தது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இடம்பெறுவாரா இல்லையா என்பது ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருந்த நிலையில், ”நீங்க சேர்த்துகிட்டாலும் நான் வரலப்பா” என்கிற ரீதியில், ராணுவ பயிற்சிக்காக போகப்போவதாக கூறி, அணி அறிவிக்கும் முன்னரே தன்னை விடுவித்துக்கொண்டார் தோனி. இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்க, தோனியோ எல்லைப்பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார். பாராசூட் ரெஜிமெண்ட், ரோந்து என தோனி ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

ganguly speaks about dhonis omission in t20 squad

அடுத்ததாக இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. இந்த மாதம் இந்தியாவிற்கு வரும் தென்னாப்பிரிக்க அணி, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணியில் தோனிக்கு இடம் அளிக்கப்படவில்லை. 

2020 அக்டோபரில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது இந்திய அணி நிர்வாகம். ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என்று உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அவரது ஆட்டத்தை பொருட்படுத்தாமல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகிறது. எனவே தோனிக்கு இனிமேல் அணியில் இடமில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவருக்காக கடைசியில் ஒரு ஃபேர்வெல் மேட்ச் மட்டும் ஏற்பாடு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் அணியில் இனி அவருக்கு இடமில்லை என்பது தெரிந்துவிட்டது. 

ganguly speaks about dhonis omission in t20 squad

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் தோனி எடுக்கப்படாதது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனியை ஓரங்கட்டும் பேச்சுக்கே இடமில்லை. 2020 டி20 உலக கோப்பைக்கான அணியை கட்டமைக்க தோனி ஒத்துழைக்கிறார். தோனி ஓய்வு குறித்து அவர் மீது பல விமர்சனங்கள் தூற்றப்படுகிறது. ஆனால் அவற்றை பற்றி கவலைப்படாமல், ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக இன்னும் ஒரு தரமான விக்கெட் கீப்பர் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து தோனி ஓய்வறிவிக்காமல் இருக்கிறார். அதனால் இப்போதைக்கு தோனியை ஓரங்கட்டும் பேச்சுக்கே இடமில்லை என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார்.

ganguly speaks about dhonis omission in t20 squad

இந்நிலையில், தோனியின் புறக்கணிப்பு வியப்பாக இருந்ததா என்ற கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை. இது தெரிந்ததுதானே. தோனி அணியில் எடுக்கப்படமாட்டார் என்பது தெரிந்த விஷயம் தான் என்பதல் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று கங்குலி தெரிவித்தார். 

ganguly speaks about dhonis omission in t20 squad

மேலும் விராட், தோனியிடம் என்ன பேசிவருகிறார் என்பது ரொம்ப முக்கியம். அதுகுறித்து அவரும் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை. அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தோனியிடம் என்ன பேசிவருகிறது என்பதும் தெரியாது. நான் அதிலிருந்தெல்லாம் சற்று விலகியிருப்பதால் எனக்கு அதுகுறித்து தெரியாது. ஆனால் தோனி தேவை என்று அணி நிர்வாகம் நினைத்தால் அவரை மீண்டும் அணியில் எடுக்கலாம். அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஓரங்கட்டுவதென்றால் அதையும் செய்யலாம். ஆனால் இதில் தேர்வாளர்களின் ரோல் ரொம்ப முக்கியமானது என்று கங்குலி தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios